அமெரிக்கா – வங்காளதேசம் வர்த்தகப் புரட்சி: 19% வரி குறைப்பு முதல் ‘ஜீரோ வரி’ சலுகை வரை – முழு விபரம்!

ுருக்கம்

டாக்கா: ஒன்பது மாத கால தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (Reciprocal Trade Agreement) கையெழுத்தானது. வங்காளதேச பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. 19% வரி குறைப்பு: வங்காளதேசத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 37 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  2. ஜவுளித் துறைக்கு ஜாக்பாட்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி (Cotton) மற்றும் செயற்கை இழைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வங்காளதேச ஆடைகளுக்கு அமெரிக்காவில் 0% (பூஜ்ஜிய) வரி சலுகை வழங்கப்பட உள்ளது.
  3. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவு திறப்பு: பால் பொருட்கள் (Dairy), மாட்டிறைச்சி (Beef), மற்றும் கோழி இறைச்சி (Poultry) ஆகியவற்றை வங்காளதேசத்தில் விற்பனை செய்ய அமெரிக்காவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
  4. தொழில்துறை மாற்றங்கள்: அமெரிக்கத் தயாரிப்பான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப (ICT) கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வங்காளதேச சந்தையில் முன்னுரிமை பெறும்.

பெரிய வணிக ஒப்பந்தங்கள்:

  • விமானம்: வங்காளதேச அரசுக்குச் சொந்தமான ‘பிமான் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் 14 போயிங் (Boeing) விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
  • எரிசக்தி: அடுத்த 15 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வங்காளதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.
  • விவசாயம்: சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க விவசாயப் பொருட்களை வங்காளதேசம் வாங்க உள்ளது.

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும