மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி சீமானிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முகன்மையானது. இரண்டாவதாக இந்த சீமானிச அணுகுமுறை சீமானோடு நிற்பதில்லை. […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார். சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று எதிர்க் கோரிக்கையும் வைத்தார். ஆக, அவர் எவ்விதச் சான்றும் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கு என்ன சான்று? சீமானிடமோ அவருக்கு சப்பை கட்டுகிறவர்களிடமோ இந்த வினாக்களுக்கு […]