தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின் தனது உரையில், “நம்முடைய கொடி எங்கெல்லாம் பறக்கிறது என்பதைக் காண என் கண்கள் நாடும்” எனத் […]

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம் 

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி […]

அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு […]

மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ! முதல்வரால் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு

மதுரை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 31) மதுரையில் 16.5 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான ரோடு ஷோவிலும், மதுரையின் முதல் மேயரான முத்துவின் புதுப்பிக்கப்பட்ட சிலைத் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். முதல்வரின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் உற்சவம் போல காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்முதல்வரின் மதுரை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, […]

தமிழகத்தின் போர்க்களம்: ஸ்டாலினின் திமுக ஏன் முன்னணியில் உள்ளது?

2021 மே 7ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும்போது, எம். கே. ஸ்டாலின் — ஒருவேளை அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக — தன்னையே “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகம் வெறும் மரபுத்தொடராகவோ, முக்கால் அரசியல் காட்டாகவோ அல்ல என்பதைக் காட்ட, நான்கு ஆண்டுகள் கழித்து அவரின் நடைமுறைதான் சான்றாக உள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்க, திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) வலுவான அடித்தளத்தோடு நின்று […]

தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம் – மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது!

தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம், வரும் ஜூன் 1, 2025 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடியில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், கட்சியின் முக்கிய மேல்மட்ட நிர்வாக முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நிர்ணயிக்கும் விதமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறவிருக்கும் தகவல், கருப்பு கல் பலகையில் பொன் எழுத்துகளால் சித்தரிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் “தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம்”, “இடம்: உத்தங்குடி – மதுரை மாவட்டம்” […]

EDக்கும் மோடிக்கும் பயமா? உதயநிதியின் வெடிக்கையான பதில்!

சென்னை: EDக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் அடிமை கட்சியல்ல என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு முடிவில், ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன […]

விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் […]

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது, இருவருக்கிடையிலான பனிப்போர் முடிவடைந்ததைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. அண்மைய சில வாரங்களாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே எடுத்துக் கூறாமல் தவிர்த்து வந்தார். அதிக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததை காரணமாக்கி, அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்ததன் பின்னணியில் இவர்களுக்கிடையே […]

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

சாதிய முதலாளி வர்க்கம்: இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப பாப்போம். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) சமீபத்திய தரவுகளின்படி (2025, ஃபிப்ரவரி), இந்தியாவுல இப்போ 28 […]