மணிப்பூரில் முடிவுக்கு வரும் ஜனாதிபதி ஆட்சி? பாஜக அரசு மீண்டும் உருவாகும் வாய்ப்பு உயர்வு!

இம்பால்: மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியும் கூட கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்துள்ள பாஜக எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அங்கு மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே […]
மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த முதல்வர் பிரன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. […]
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்

ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று ஈன தனமாய் காட்சியளிக்கிறது. ஊடகத்தை பார்த்தால் நாம் இந்த தமிழ் நாட்டில் உள்ளோமா இல்லை பக்கத்து […]