உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார். அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில் இருக்கிறது; இது வரலாற்றில் இது வரை இருந்த மிக அபாயகரமான நிலை என்றார் சாம்ஸ்கி. உலகம் […]
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி) மதிப்புள்ள முனைவர் பட்ட உதவித்தொகையை நிறுவ திட்டமிட்டுள்ளார். திராவிட சிந்தனை – உலகளாவிய உரையாடலுக்குள் இந்த […]
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த நன்கொடை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நன்கொடை நிரந்தர முனைவர் பட்டப் படிப்புக்கு நிதியளிக்கும் மற்றும் திராவிட […]
திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு மாவட்டம் , இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் குப்பம் (இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு […]
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டது. “நாடார் மகாஜன சங்கம்” போன்ற சமூக சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நாடார் சமூகத்தை பிற தொழிலில், […]
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது. இதனால் தீண்டாமை நுழைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ! Nlc India நிறுவனத்தில் […]
“சட்டமே அடித்தளம் – புல்டோசர் நீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய உச்ச நீதிமன்றம்!”
இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஜூன் 19 அன்று இத்தாலியில் நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைவர்களின் மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார்.அந்த உரையில் அவர் கூறிய கருத்துகள் இந்திய நீதித்துறையின் மதிப்பையும், நம் அரசியலமைப்பின் நெறிப்பாதையையும் மிக தெளிவாக வெளிப்படுத்துகிறது. தெருவோரம் குடியிருக்கும் பொதுமக்கள், “அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது” என்ற காரணத்தால் எச்சரிக்கையும் இல்லாமல் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறார்கள்.இதைக் கண்டித்துப் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தை வந்தடைந்தன. அதில், நீதிமன்றம் கூறியது: “ஒரு வீடு என்பது ஒரு சொத்து […]
ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது – தேர்தல் ஆணையம் சிசிடிவி கண்காணிப்பு திட்டத்துக்கு ஒப்புதல்!
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ராகுல் காந்தி அவர்கள், மிக முக்கியமான ஒரு வெற்றியை இன்று பெற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்த ராகுல் காந்தி, “காலை முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து பூத்களிலும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால், தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் இதற்கு தெளிவான பதிலை அளிக்காமல் தவிர்த்து வந்தது. தற்போதாவது வேறு வழியின்றி, […]
2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?

2020ம் ஆண்டிற்குப் பிறகு உலகம் சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது வெறும் கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனில் நடக்கும் படுகொலைகள், இஸ்ரேல் ஈரான் போர்அல்லது உலகளாவிய விளம்பர கலாச்சாரம் போன்ற நிகழ்வுகள் மட்டும் அல்ல. இதை விட ஆழமான ஒரு புதிய ஒழுங்கும் அமைப்பு உலகத்தையே புதிய வழியில் இயங்க வைக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலை என்பது Negri மற்றும் Hardt ஆகியோரின் “Empire” “அதிபேரமைப்பு” எனும் புதிய […]
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!
இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய துணை அமைப்பான BHP (Bajrang Dal) ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சந்திரகுமார் […]