மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகிய ’சர்வரோக நிவாரணி’ அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருப்பதாக […]
தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!

தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின் நிதியை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிகளை பிற […]
ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவற்றில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது மற்றும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. மசோதாக்களை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநரின் செயலுக்கு எதிராக, தமிழக […]
“மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மற்றும் அதன் பாதிப்புகள்கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பு மற்றும் தொடக்க கூட்டம்”
2026-ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்ஐடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள்குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள22.3.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் – பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும்முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம். 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும்பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய […]

பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த அறுதியான அறிவுப் பெட்டகம் அன்று. வளர்ந்து செல்லாத எதுவும் அறிவியல் ஆகாது. மார்க்சிய மூலவர்களிடம் அறமும் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)

அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும், முதல் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனியில் ரோசா லக்சம்பர்க் தலைமையில் பொதுமைக் கட்சி ஒன்று ’ஸ்பார்ட்டகஸ் […]
புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும். அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு. அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை இழிவுபடுத்தி பேசிய வகையில், எஸ்சி/எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் படி பதியப்பட்ட ஒரு வழக்கும் நிலுவை யில் […]
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே பாஜக எனலாம். 2010 சமயத்தில் விஜய் அரசியல் ஆசையுடன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

[இந்த இடுகைத் தொடரில் தவிர்க்கவிய்லாத பணிகளால் சற்றே நீண்ட இடைவெளி விழுந்தமைக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.] மார்க்சியத்தின் வல்லமை குறித்தும், அதன் வரலாற்று வழிப்பட்ட வரம்புகள் குறித்தும், ஏனைய புரட்சியக் கொள்கைகளுடன் அதற்குள்ள உறவு குறித்தும் என் பார்வைகளில் மாற்றமில்லை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக நான் விரும்பவில்லை. தோழர் வேலனும் தோழர் சண்முக சுந்தரமும் (Pcp) இந்த உரையாடலில் பங்கேற்றிருப்பதை வரவேற்கிறேன். அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களை […]