லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

இந்தியன் ரயில்வேயில் வேலை: 312 காலிப்பணியிடங்கள்! ரூ.45,000 வரை சம்பளம் – விண்ணப்பிப்பது எப்படி?

ுருக்கம்

மத்திய அரசு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB), பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 312 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

இந்த அறிவிப்பின் கீழ் பல்வேறு விதமான தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

பணியின் பெயர்காலியிடங்கள்
இளநிலை மொழிபெயர்ப்பாளர் (ஹிந்தி)202
ஆய்வக உதவியாளர் (Grade III)39
பணியாளர் மற்றும் நலத்துறை ஆய்வாளர்24
தலைமை சட்ட உதவியாளர்22
மூத்த விளம்பர ஆய்வாளர்15
அரசு வழக்குரைஞர்07
இதர பணியிடங்கள் (அறிவியல் உதவியாளர்/மேற்பார்வையாளர்)03
மொத்தம்312

கல்வித் தகுதி மற்றும் சம்பளம்:

  • கல்வித் தகுதி: பணிக்கு ஏற்ப இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் (சட்டம்/ஹிந்தி/ஆங்கிலம்), பிளஸ் 2 (அறிவியல் பிரிவு) அல்லது இதழியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு பணி அனுபவம் அவசியமாகும்.
  • சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சம் ரூ.44,900 வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்) மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.rrbapply.gov.in
  • தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (CBT), திறனறித் தேர்வு, மொழிபெயர்ப்புத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • கடைசி நாள்: 29.01.2026

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும