பெரம்பூரைக் கைப்பற்றுகிறது திமுக: நடிகர் விஜய்க்கு பின்னடைவா? – சிறப்பு சர்வே முடிவுகள்!

ுருக்கம்


சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தவெக தலைவர் நடிகர் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்காளர் பலமும் கள நிலவரமும்

சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலின்படி, பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் (1,14,726) ஆண்களை விட (1,07,995) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 71 பேர் உள்ளனர். இந்த பெரும் வாக்காளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

சினிமா வேறு, அரசியல் வேறு!

“தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், வாக்களிப்பது என்று வரும்போது எங்கள் தேர்வு திமுக தான்” எனப் பல குடும்பங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மூன்று தலைமுறையாக திமுகவை ஆதரிக்கும் குடும்பங்கள், சினிமா கவர்ச்சியால் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை இச்சர்வே உறுதிப்படுத்துகிறது.

விஜய் வெற்றி பெறுவாரா? என்ற கேள்விக்கு:

  • 75% பேர் – இல்லை
  • 20% பேர் – வெற்றி பெற வாய்ப்பு
  • 5% பேர் – கருத்து இல்லை

ஆர்.டி. சேகருக்கு சாதகமான அம்சங்கள்

திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவராக இருப்பதும், ‘கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர்’ என்ற நற்பெயரும் அவருக்குப் பெரும் பலமாக உள்ளது. சிறுபான்மையின மக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர், குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி. சேகருக்கே தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

பெரம்பூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை தொகுதி மக்களிடையே ஆளுங்கட்சி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

விஜய் மற்றும் பிற கட்சிகளின் நிலை

நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை, அதிமுகவின் வாக்குகள் அவருக்குப் பெரிய அளவில் செல்லக்கூடும் என்பதால் அவர் இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. எனினும், “கரூர் சம்பவம்” மற்றும் அவர் பிரச்சாரத்திற்கு வராதது குறித்த விமர்சனங்கள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

சர்வே முடிவுகளின் சுருக்கம்:

வேட்பாளர்கட்சிஆதரவு சதவீதம்
ஆர்.டி. சேகர்திமுக40%
விஜய்தவெக24%
திலகபாமாபாமக22%

இந்த சர்வே முடிவுகள் பெரம்பூர் தொகுதியில் திமுகவின் கோட்டையைத் தகர்ப்பது விஜய்க்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும