ஐந்தாம் ஆண்டு குழந்தைகள் தின விழா: மூலக்கழனியில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி பங்கேற்பு !
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூலக்கழனி கிராமத்தில் உள்ள SPAC ஹாலில், உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அசட் (ASSET) அமைப்பு சார்பில், ஐந்தாம் ஆண்டு குழந்தைகள் தின விழா மற்றும் ஆதிவாசிகளின் தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காயரம்பேட்டில் இயங்கி வரும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் இயக்குநர் டி. சுப்பிரமணி தலைமை தாங்கினார். கல்வாயில் இயங்கி வரும் ஆதிவாசி சமூக சேவை கல்வி அறக்கட்டளையின் (அசட் […]