“சட்டமே அடித்தளம் – புல்டோசர் நீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய உச்ச நீதிமன்றம்!”

இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஜூன் 19 அன்று இத்தாலியில் நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைவர்களின் மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார்.அந்த உரையில் அவர் கூறிய கருத்துகள் இந்திய நீதித்துறையின் மதிப்பையும், நம் அரசியலமைப்பின் நெறிப்பாதையையும் மிக தெளிவாக வெளிப்படுத்துகிறது. தெருவோரம் குடியிருக்கும் பொதுமக்கள், “அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது” என்ற காரணத்தால் எச்சரிக்கையும் இல்லாமல் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறார்கள்.இதைக் கண்டித்துப் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தை வந்தடைந்தன. அதில், நீதிமன்றம் கூறியது: “ஒரு வீடு என்பது ஒரு சொத்து […]