தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா என மதுராந்தகம் சட்டசபை உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி […]

சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் – நகைகளை விற்பனை செய்து உடனடி பணம் பெறும் புதிய வசதி!

பெய்ஜிங்: தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் மூலம் பழைய தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும். ஏடிஎம் இயந்திரத்தில் தங்க நகைகளை வைத்தால் அதன் எடைக்கு ஏற்ப பணம் என்பது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் குறித்த விபரம் வருமாறு: நாடுகளுக்கு இடையேயான மோதல் மற்றும் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் […]

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விதி எண் 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: – திராவிட […]