மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் – காலநிரல்

25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையவுள்ளவுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக இந்த ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை தடுக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட நடவடிக்கைகள் அதன்பின் எடுக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் […]
தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது – ♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)

மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான லியோ தோல்ஸ்தோய் (டால்ஸ்டாய்) எனும் உருசிய (ரஷ்ய) பெருமகனை எவ்வாறு மதிப்பிட்டார் என்பது கருத்துக்குரிய செய்தியாக […]