ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவற்றில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது மற்றும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. மசோதாக்களை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநரின் செயலுக்கு எதிராக, தமிழக […]

“மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மற்றும் அதன் பாதிப்புகள்கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பு மற்றும் தொடக்க கூட்டம்”

2026-ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்‌ மேற்கொள்ளப்படும்‌ மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌ஐடிப்படையில்‌ தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்‌ நாடாளுமன்றப்‌பிரதிநிதித்துவத்தில்‌ ஏற்படும்‌ பாதிப்புகள்‌ குறித்தும்‌, எடுக்கப்படவேண்டிய முடிவுகள்‌குறித்தும்‌, ‘கூட்டு நடவடிக்கைக்‌ குழு’ அமைத்து தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள22.3.2025 அன்று ஆலோசனைக்‌ கூட்டம்‌ – பல்வேறு மாநில முதலமைச்சர்கள்‌ மற்றும்‌முன்னாள்‌ முதலமைச்சர்கள்‌ மற்றும்‌ கட்சித்‌ தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌. 2026 ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்‌ மேற்கொள்ளப்படும்‌ மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌அடிப்படையில்‌ நாடாளுமன்றத்‌ தொகுதிகள்‌ மறுவரையறை செய்யப்பட்டால்‌ ஏற்படும்‌பாதிப்புகள்‌ குறித்தும்‌, அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய […]