மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி சீமானிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முகன்மையானது. இரண்டாவதாக இந்த சீமானிச அணுகுமுறை சீமானோடு நிற்பதில்லை. […]
மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!

வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்… நான் ரெண்டு உலகப்போரை பார்த்தவ, எத்தனையோ இழப்புகள சந்திச்சவ, எவ்வளவோ […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார். சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை […]