தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது – ♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகிய ’சர்வரோக நிவாரணி’ அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருப்பதாக […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]
மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!

வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்… நான் ரெண்டு உலகப்போரை பார்த்தவ, எத்தனையோ இழப்புகள சந்திச்சவ, எவ்வளவோ […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார். சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 17 நாளாயிற்று. தன் குற்றச்சாட்டுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. “உங்களிடம்தான் அது இருக்கிறது” என்று கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழக் கதையைப் போல் கதை விட்டுச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த அவதூறுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை வீறாப்பாக அறிவித்துக் குறைந்தது 15 நாளாயிற்று. அவரும் எவ்விதச் சான்றும் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று எதிர்க் கோரிக்கையும் வைத்தார். ஆக, அவர் எவ்விதச் சான்றும் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக் காட்டி வரலாற்று இயங்கியல் பொருண்மியத்தின் மையக் கோட்பாட்டை விளக்கினேன். மார்க்ஸ் மறைந்த பின்… அவரது படிப்பறையில் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கு என்ன சான்று? சீமானிடமோ அவருக்கு சப்பை கட்டுகிறவர்களிடமோ இந்த வினாக்களுக்கு […]
பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்குக் கேடு வினைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் […]