சமூக நீதி மரபும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் புரட்சியும் !

தமிழ்நாடு, பல தசாப்தங்களாகத் தனது உற்பத்தித் துறையின் சிறப்பிற்காக அறியப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், மாநில அரசு அந்தப் பலத்தை ஆழமான தொழில்நுட்பம் (Deep-Tech) மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகள் (Innovation) நோக்கி விரிவுபடுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கூற்றுப்படி, இன்று தமிழ்நாடு, “புதிய கண்டுபிடிப்பு மூலதனத்தின்” இலக்கை நோக்கி ஒரு தீர்க்கமான உத்தியுடன் பாய்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஓசூரில் நடைபெற்ற ‘டி.என். ரைசிங் இன்வெஸ்ட்மென்ட் கான்லேவ்’ நிகழ்வில், அரசு ஆதரவுடன் உருவான ‘டோரஸ் […]
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த நன்கொடை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நன்கொடை நிரந்தர முனைவர் பட்டப் படிப்புக்கு நிதியளிக்கும் மற்றும் திராவிட […]
அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை அடுத்து கீழடி முதல் தொகுதி மறுவரையறை வரை ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை குறித்து ஆர் .ராசா […]
புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும். அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு. அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை இழிவுபடுத்தி பேசிய வகையில், எஸ்சி/எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் படி பதியப்பட்ட ஒரு வழக்கும் நிலுவை யில் […]
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு வர முயன்ற பல நபர்களை இதேபோல் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ராஜபாளையத்தில் […]
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!

தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது, அதற்கெதிராக தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியை ஒடுக்கி, இனக்கொலை நடந்தேற இந்திய வல்லதிக்கத்தோடு துணை நின்றதன் […]
கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 முதல் 2017 வரை பெரியாரிய இயக்கங்கள் இதை எதிர்த்து பேசினார்கள் என்று சொன்னால் […]
பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்

வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று தனது தெய்வத்தின் குரலில் மகா பெரியவா சொன்னதை, வழக்கம் போல பெரியார் சொன்னதாக ஒரு அப்பட்டமான […]