உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ‘எவ்வளவு கொடுத்தாலும்…’ என்று சொல்லும் அவர் எவ்வளவுகொடுத்தோம் என்பதைப் பட்டியல் போட்டிருந்தால் பாராட்டலாம். எதுவும் கொடுக்காத […]

ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு […]

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!

தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது மத்திய அரசு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாஜக அமைச்சர்கள் கூறும் ஆணவமுள்ள பேச்சுகளும், தமிழர்களின் […]

மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு

சென்னையில் மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலரும் சிறந்த உணர்வுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஷண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]

திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே

இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை சமாளித்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய செய்தது, நிதி மேலாண்மை மேம்பட நிதி வல்லுநர்களை நியமிப்பது, […]

தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட அரசியல் நோக்குகளின் எல்லைகளை கடந்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற […]

கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 முதல் 2017 வரை பெரியாரிய இயக்கங்கள் இதை எதிர்த்து பேசினார்கள் என்று சொன்னால் […]

“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.

எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி கடுமையான விமர்சனங்களை வைத்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஒரு […]

துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது… “2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். தற்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். கடந்த சில […]