மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

செந்தில் மள்ளர் புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் மேற்கோள் காட்டும் விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்பதை சீமான் ஆதரவாளர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு நாள் விடுதலை இதழாக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முற்பட்டுள்ளார்கள். சரி, அந்த விடுதலை இதழை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லட்டும். பொறுமையாகக் காத்திருப்போம். பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்கட்டும், காட்டுகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படியே இருக்கட்டும், அது வரை சீமான் தந்தை பெரியார் மீதான அவதூறை […]

வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் […]

வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்

யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி கதைகளை அடுக்கினான்..சிலைகளை உடைப்பேன் என்று பூச்சாண்டி காட்டினான்..நெய்தல் படை அமைப்பேன் என்று புருடா விட்டான்..ஆடு மாடு […]

UGC செயல்பாடுகள் – கல்விக்கு தொடர்பில்லாத ஆளுமைகளை கொண்டு மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் செயல்

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலில் 25 ஆவது வரிசையில் பல்கலை கழகங்கள் உள்ளது. அதாவது பல்கலை கழக விஷயங்களில் மாநிலம் மற்றும் ஒன்றிய அரசுகள் இருவருக்கும் அதிகாரம் உள்ளது என்பதே ஒத்திசைவு பட்டியல் (Concurrent List) இதற்கு நேரெதிராக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் விதமாக யுஜிசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ஆளுநரின் அதிகாரங்களை விரிவு படுத்தி துணை ஆளுநர் நியமிப்பிலும் மூன்று நபர் குழுவை ஆளுநரே நியமிக்கும் இந்த புதிய சட்ட முன்வடிவம் […]

பொங்கல் சிறப்பு ரயில் மதுரை – சென்னை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மெமு ரயில் என்பது (Mainline Electric Multiple Unit) கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை போன்றதாகும். இந்த […]

HMPV : யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக… – அமைச்சர் மா.சுப்ரமணியன்

சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த வைரஸ் தொற்று பற்றி யாரும் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிய மா.சுப்ரமணியன், “இந்த வைரஸ் 50 ஆண்டுகளாக […]

‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ, எங்க உயிர் கரைஞ்சுட்டே இருக்கு. எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிருக்கோம். யாழினி முகத்தை பார்த்துப் பார்த்து […]

தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் வளர்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் புதிய மாற்றங்கள்,பெரியார் மண்ணில் சமூக ஒருமைப்பாடு, உயரிய நிதிகள் மற்றும் சட்டம்

இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை நிறைவேற்றுகிறோம்; மதவெறி, சாதி வெறி எண்ணம், நான் இருக்கும் வரை இந்த பெரியார் மண்ணில் நிகழாது. சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூகநீதியை நிலைவாட்டுவோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது தமிழ்நாடு அரசு. மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வகையில், ஒற்றுமை மற்றும் சமத்துவ அடிப்படையில் அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு, எப்போதும் சமூக அக்கறை மற்றும் காந்தி நிலைகளில் திகழ்ந்திருக்கிறது. மதம், பால், சாதி, மொழி என […]

“‘மோதி பார்த்திடலாம்; எத்தனை நாள்களுக்கு காக்கி உடையில் இருப்பீர்கள்?’ – வருண் IPS-க்கு சீமான் கேள்வி”

சீமான், வருண் ஐபிஎஸ் பிரிவினைவாதம் குறித்த கருத்து மற்றும் அரசின் செயல்பாடுகளை குறித்த விமர்சனம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளை வெளியிட்டார். அந்த பேச்சில் அவர் கூறுகையில்: “வருண்குமார் ஐபிஎஸ், நீண்ட காலமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார், ஆனால் அவர் புதியதுவாக எதையும் சொல்லவில்லை. நாம் கடந்த 13 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, கட்சி நடத்தி வருகிறோம். 36 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழ்நாட்டின் 3வது மிகப்பெரிய […]