“வளர்ச்சி என்றால் கட்டடங்களும் கார்களும் அல்ல; மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழும் நிலைதான்” – என்ற முஹிகா (#José_Mujica) மறைந்தார் :
நாம் அனைவரும் ஏங்கும், விரும்பும் அரசியலின் ஒரு அழகான முகவரியாக, சரியான நபரிடம் இடதுசாரி தத்துவம் இருந்தால் அது இந்த உலகை எப்படி அழகாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டு உருகுவையின் முன்னாள் குடியரசுத் தலைவர் #ஜோஸ்_முஹிகா. அவர் வாழ்க்கை முழுவதும் எளிமைக்கும், நேர்மைக்கும், மக்கள் நலனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. ஜோஸ் முஹிகா ஒரு முன்னாள் புரட்சியாளர். தனது அரசியல் வாழ்க்கையை தீவிர இடதுசாரி இயக்கங்களோடு தொடங்கியவர். பின்னாளில் ஜனநாயக வழியில் நாட்டின் தலைவராக உயர்ந்தார். 2010 முதல் 2015 […]
முதல்வராக இருந்தும் என் தோல்விக்கு மன்னிப்பும் இல்லை, விளக்கமும் இல்லை..” என வேதனை வெளியிட்டார் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதற்கிடையே பயங்கரவாத செயலுக்குக் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வார்த்தைகளே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த துயரச் சம்பவத்தை வைத்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன் எனத் தெரிவித்தார்.. கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் […]
விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் […]
துணைவேந்தர்கள் புறக்கணிப்பு – “மாநில அரசு பொறுப்பல்ல”, அமைச்சர் செழியன் பதிலடி

சென்னை: ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உணர்ந்தே புறக்கணித்துள்ளனர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக கடுமையான தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குதான் என்ற சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களை தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தின் மூலம் ஒப்புதல் அளித்து சட்டமாக்கியது. ஆளுநர் ரவி கூட்டிய […]
செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது, இருவருக்கிடையிலான பனிப்போர் முடிவடைந்ததைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. அண்மைய சில வாரங்களாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே எடுத்துக் கூறாமல் தவிர்த்து வந்தார். அதிக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததை காரணமாக்கி, அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்ததன் பின்னணியில் இவர்களுக்கிடையே […]
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் ஊட்டியில் இன்று தொடங்கும் துணைவேந்தர்கள் மாநாடு

நீலகிரி: ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். கடும் எதிர்ப்பை மீறி இன்று ஊட்டியில் தொடங்குகிறது துணை வேந்தர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது என மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன. துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 மத்திய, மாநில மற்றும் தனியார் […]
சென்னையில் ரூ.40 கோடியில் உருவாகும் UPSC பயிற்சி மையம் – ‘நான் முதல்வன்’ திட்ட மாணவர்களுக்கு அரசு பாராட்டு விழா!

சென்னை: சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யுபிஎஸ்சி (UPSC) பயிற்சி மையம் ரூ. 40 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கே எனக்கு முன்பு எம்.எல்.ஏ, தம்பி வெற்றி அழகன் மிக அழகாக, நிதானமாக பல்வேறு கருத்துக்களை எடுத்து வைத்து உரையாற்றியிருக்கிறார். அவர் பேசுகிறபோது, நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, சில வரங்களையெல்லாம் […]
பஹல்காம் பரிதாபம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!

சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. […]
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா என மதுராந்தகம் சட்டசபை உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி […]
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விதி எண் 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: – திராவிட […]