“ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு கடிதம் கொடுத்தேன்…” – வைகோ பகிர்வு!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகள் ஒரு வருடத்துக்கு தனது வீட்டில் தங்கியிருந்ததை, தாயார் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததை, மற்றும் பிரபாகரனை சந்திக்க ஈழம் சென்ற அனுபவத்தை குறிப்பிட்டார். பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக 57 போராளிகளை அனுப்பியதை வைகோ நினைவுகூறினார். ஈழம் செல்லும் முன் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் என்றும் தெரிவித்தார். பிரபாகரனை சந்திக்க சென்றதற்கு […]
ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? – தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!

கர்நாடக பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அவரின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், ரகசிய மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆவணங்களை முன்வைத்து, ராகுல் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அவர் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி. பாண்டே, “இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது” என்று […]
Adani: `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!’ – என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!

அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம்:மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அதானி குழுமம் தொடர்பான அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டுகளில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயினின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார். முதல் மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுகள் முக்கியமானவை என்றாலும், அவற்றில் அதானி குழுமத்தின் தலைவர்களின் பெயர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க நீதிமன்ற குற்றப்பத்திரிகை மற்றும் அதானி குழுமம்:அமெரிக்க நீதிமன்றத்தில், சோலார் […]
Rain Alert: இன்று இந்த’ மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை…இங்கே’ காலை 10 மணி வரை மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கடலூர், […]
Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?’; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பா.ஜ.க நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ராகுல் பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ரகசிய மின்னஞ்சல்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின் போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி. […]
`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!’ – புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தித்த இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் சந்தித்த தோல்வி அதிர்ச்சியில் இருந்து அக்கட்சிகள் இன்னும் மீள வில்லை. தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சொற்ப எம்.எல்.ஏ.க்களும் அணி மாறிவிடுவார்களோ என்ற அச்சம் உத்தவ் தாக்கரேயிக்கு எழுந்துள்ளது. எனவே அவர்கள் 20 […]
“தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்” – நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும் மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிப்புகளை சரிசெய்ய 125 ஜேசிபி இயந்திரங்கள், 250 ஜெனரேட்டர்கள், 26,000 […]
மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று காலையில் சந்தித்து பேசினர். முதலில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் […]
Ind vs Aus: “ஆரம்பத்தில் எங்கள் மீது ப்ரஷர் இருந்தது; ஆனால்..!’’ – வெற்றி குறித்து கேப்டன் பும்ரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 4-வது நாளில் வெற்றி பெற்றது. கேப்டன் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் சதங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 487 ரன்கள் குவித்தது. பும்ரா மொத்தம் 8 விக்கெட்கள் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வெற்றிக்கு பிறகு பும்ரா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, “அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டார்கள். ஜெய்ஸ்வாலின் […]
Vijay: “பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்” – தவெக விஜய்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான […]