அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: TAPS ஓய்வூதியத் திட்ட அரசாணை வெளியீடு!

ுருக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களை வழங்கும் நோக்கில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் – 2026’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை நிதித்துறைச் செயலாளர் த. உதயசந்திரன் இன்று வெளியிட்டுள்ளார்.

1. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பெற்ற கடைசி மாத அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக உறுதியாக வழங்கப்படும்.
  • அகவிலைப்படி (DA) உயர்வு: பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
  • பங்களிப்பு முறை: ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பங்களிப்பாக வழங்குவார்கள். ஓய்வூதியம் வழங்கத் தேவைப்படும் மீதமுள்ள கூடுதல் நிதிச் சுமையை முழுமையாகத் தமிழக அரசே ஏற்கும்.
  • குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்தினருக்கு (Nominee) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  • பணிக்கொடை (Gratuity): பணி ஓய்வின் போது அல்லது பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

2. யாருக்குப் பொருந்தும்?

  • ஜனவரி 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் தகுதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
  • 2003-ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) இருந்த ஊழியர்கள், தங்களின் ஓய்வின் போது CPS அல்லது TAPS ஆகிய இரண்டில் ஒன்றை வரித்துக் கொள்ளும் (Option) வசதி வழங்கப்படும்.
  • ஜனவரி 1, 2026-க்குப் பிறகு பணியில் சேருபவர்களுக்கு இத்திட்டம் கட்டாயமாக்கப்படும்.

3. நிதி ஒதுக்கீடு:

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடக்க நிதியாகத் தமிழக அரசு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், இதற்காக ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 11,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும