Ind vs Aus: “ஆரம்பத்தில் எங்கள் மீது ப்ரஷர் இருந்தது; ஆனால்..!’’ – வெற்றி குறித்து கேப்டன் பும்ரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 4-வது நாளில் வெற்றி பெற்றது. கேப்டன் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் சதங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 487 ரன்கள் குவித்தது. பும்ரா மொத்தம் 8 விக்கெட்கள் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வெற்றிக்கு பிறகு பும்ரா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, “அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டார்கள். ஜெய்ஸ்வாலின் […]

Vijay: “பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்” – தவெக விஜய்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான […]

Udhayanithi Stalin: “இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!” – தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், ரத்ததான நிகழ்வுகள் மற்றும் “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்களின் செயல்பாடுகளுடன் கொண்டாடப்பட இருப்பதை அறிவித்துள்ளார். இதற்காக கழகத்தினரிடமும் இளைஞர் அணித் தோழர்களிடமும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். உதயநிதி, பிறந்தநாள் விழாவை திராவிட இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விழாவாக மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர், சுற்றுச்சூழலுக்கு மாசு […]

Kangana Ranaut: “பெண்களை அவமரியாதை செய்பவர்கள்…” – உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது. அதனால், எதிர்க்கட்யே இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் […]

மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ – அதிர்ச்சியில் ராஜ் தாக்கரேமு.ஐயம்பெருமாள்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சியின் தோல்வி:மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தனியாக 120 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியின் மாநில கட்சி அந்தஸ்து தொடர்வதில் சந்தேகம் எழுந்துள்ளது, ஏனெனில் 6% வாக்குகள் மற்றும் 2 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகின்றன. முக்கிய தொகுதிகளில், அமித் தாக்கரே உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். வாக்கு பங்கீடு மற்றும் சிறிய கட்சிகளின் தாக்கம்:மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் வாக்கு […]